my thoughts.....

constellation, assimilation, formation and expression of my cerebration!

Tuesday, July 15, 2008

வெண்பா - Illustrated


சில கவிதைகளை கிறுக்கி கொண்டிருக்கையில், நண்பர் ஒருவருடன் வெண்பாக்கள் பற்றிய பேச்சு எழுந்தது. அதனை தொடர்ந்து, வெண்பாக்கள் பற்றி அறிய வேண்டுமென்ற ஒரு உந்துதலும் ஏற்பட்டது. சில முயற்சிகளுக்கு பின், வெண்பா இயற்றுதலை நிர்ணயிக்கும் யாப்பிலக்கணத்தின் மரபு உறுப்புக்களான அசை (syllable), சீர் (foot), அடி (line) மற்றும் தளை (phonetic harmony) போன்றவற்றையும் மற்றும் யாப்பிலக்கணத்தின் இடம் சார இலக்கணத்தன்மையையும் (context free grammar) அறிய நேர்ந்தது.

நான் எழுதிய hypocrites பற்றிய ஒரு கவிதையை வெண்பாவாக மாற்றும் எனது முயற்சியை மேற்கொண்டதன் விளைவை கீழே உள்ள கவிதையையும் இதற்கு முன் நான் எழுதிய இதன் அசலையும் ஒப்பிடுவதன் மூலம் அறியலாம். நான் புரிந்து கொண்டதிலிருந்து, வெண்பாவின் யாப்பிலக்கணத்தை பற்றி சுருக்கமாக இங்கே கூறுகிறேன். யாப்பிலக்கணம் மிகவும் பழமை வாய்ந்ததால், சற்றே கடினமாக தோன்றும் மரபுகளை (grammar) கொண்டுள்ளது.

- பாடலின் சந்த சுவையை காப்பதற்காக (attainment of musical flow through phonetic harmony) அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

- யாப்பிலக்கனத்திர்க்குட்பட்ட வெண்பாக்கள் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகளையே (2 to 12 lines) கொண்டிருத்தல்வேண்டும்.

- ஈற்றடியை (last line) தவிர ஏனைய ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களை (feet - words are to sentence is as feet are to line) கொண்டதாகவும், ஈற்றடி முச்சீர்களை கொண்டதாகவும் அமைய வேண்டும்.
வெண்பாவின் ஒவ்வொரு சீரும் பெரும்பாலும் ஈரசயோ (two syllable) அல்லது மூவசையோ (three syllable) கொண்டதாக இருக்கும்.

- ஈரசை எனில் மாச்சீராகவோ (combination of two simple syllables (காணா, கூவும்) or combination of a compound syllable followed by a simple syllable (இனிமை, எழுச்சி)), அல்லது விளச்சீராகவோ (combination of two compound syllables (நடையினில், உடையினில்) or combination of a simple syllable followed by a compound syllable (வாக்கினில், சிந்தையில்)), மூவசை எனில் காய்ச்சீராகவோ (மாச்சீர் அல்லது விளச்சீரை தொடர்ந்து கூட்டு அசை அல்லாத (compound syllable) ஒற்றை எளிய அசையை கொண்டுள்ள (simple syllable) சீர் (மாறுகின்ற, கூறுகின்ற)) இருத்தல் வேண்டும்.

- ஈற்றடியில் உள்ள ஈற்றுச்சீர் (last syllable) ஒற்றை அசைச்சீராகவோ அல்லது மாச்சீரகவோ இருத்தல் வேண்டும் (நெறியில்)

- ஒரு அடியில் முதலில் வரும் ஈரசை சீரின் (preceding foot) இறுதி அசையும் (last syllable) அடுத்து வரும் சீரின் (succeeding foot) முதல் அசையும் (first syllable) தன்மையில் வேறுபட்டிருக்கவேண்டும். (For example, if the last syllable of preceding foot is simple, the first syllable of succeeding foot should be compound and vice versa - சிந்தையில் காணா, அவரின் தொலியில்)

- ஒரு அடியில் முதலில் வரும் மூவசை சீரின் இறுதி அசையும் அடுத்து வரும் சீரின் முதல் அசையும் எளிய அசையாக இருக்க வேண்டும் (கூறுகின்ற கூற்றில்).

மேற்காணும் நெறிகள், சந்தத்தின் (musical flow) மீதான ஒலிப்பியலின் (phonetics) நிர்ணயத்தை பற்றி ஆழ்ந்து அறிந்த பின்னரே அமைக்க பட்டிருக்க வேண்டும். ஒரு பாவை பொருள் நயத்துடன் மட்டும் எழுதுவது ஒற்றை பரிமாண கோட்டை மட்டும் இழுப்பது போன்றதாகும். அதே பாவை சொல் நயத்துடனும் எழுதுவது ரெட்டை பரிமாண உருவங்களை வரைவது போன்றதாகும். அதே பாவை வெண்பாவாக எழுதுவது முப்பரிமான திட பொருட்களை உருவாக்குவது போன்றதாகும்.

வெண்பாவின் யாப்பிலக்கணம் கொண்டுள்ள கட்டுக்கோப்பான மரபுகள் ஏற்படுத்தும் தளைகள் (constraints), ஒருவரது மொழி புலமைக்கும் கற்பனை வளத்திற்கும் சவாலாக விளங்கும் என்றால் அது மிகை இல்லை. எனது அறை நண்பர் கூறிய ஒன்றையும் இங்கு சொல்லியாக வேண்டும். கவி பேரரசு வைரமுத்து அவர்கள் தம் பன்னிரெண்டாம் அகவையிலேயே வெண்பா புனைந்த்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்! வெண்பாவின் யாபிலக்கனதிற்கு பா புனைவது, மற்ற எந்த ஒரு இசை இலக்கணத்திற்கும் (tunes) பா புனைவதின் முதல் படியாக தோன்றுகிறது!

வெண்பா

சிந்தையில் காணா பரிணாம மாற்றம்,
தம்முடைய வாக்கினில் மீளும் பொருளில்!
அணியும் உடையினில் மாறுகின்ற வண்ணம்,
அவரின் நடையினில் கூறுகின்ற கூற்றில்!
சதையின் இனிமை அவரின் தொலியில்,
தொலியின் வெறுமை அவரின் சதையில்!
எழுச்சியின் மீறலோ கூவும் குரலில்,
தளர்ச்சியோ ஒழுகும் நெறியில்!

அசல்

சிந்தையிலிலா பரிணாம வளர்ச்சி,
அவரின் சொல்லில்!
அணியும் உடையில் மாறும் நிறம்,
அவரின் நடையில்!
சதையின் இனிமை அவர் தோலில்;
தோலின் வெறுமை அவர் சதையில்!
எழுச்சியோ அவர் குரலில்;
தளர்ச்சியோ அவர் நீதியில்!


பாவின் இவ்விரு வடிவங்களையும் ஒப்பிடுகையில் சந்தச்சுவையில் உள்ள இடைவெளியை தெளிவாக உணர முடிகிறது. நம் முன்னோரின் மொழிப்புலமைக்கு மட்டுமல்லாது, தற்போதைய நவீன அறிவியல் பிரிவுகளில் ஒன்றான ஒலிப்பியலை (phonetics) பற்றிய புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் யாப்பிலக்கணம் விளங்குகிறது.

1 Comments:

  • oh..gud..my wishes to u.. nice idea.. go on. Maestro(Ilayaraja) is also well a master of this sort of tamil writing. ( just a piece of news). Gud show !

    By Blogger Raghu, At July 16, 2008 5:35 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link

<< Home