my thoughts.....

constellation, assimilation, formation and expression of my cerebration!

Tuesday, August 12, 2008

சுப்ரமணியபுரம் - ஒரு 'காவி'யம்

சமீபகாலமாக திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தருமபுரி, பழனி, திருவண்ணாமலை என தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்களில் திரைப்படங்கள் எடுத்து வரும் பேரரசுவின் அடுத்த கைவண்ணமோ என சற்றே மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் படத்தலைப்பு! ஆனால், "ஆனந்த விகடன்" நாளிதழில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இத்திரைப்படத்தின் நிழற்படங்கள், படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பினை என்னிடம் ஏற்படுத்தியது.

படம் ஆரம்பித்தவுடன் இருட்டில் நடந்து செல்லும் கால்களாக, பின்னால் நின்றுகொண்டிருக்கும் காவலர்களை திரும்பி பார்க்கும் கழுத்தாக, சிறைக்கதவின் மறுபக்கம் உள்ள உலகைக் காண துடிக்கும் விழிகளாக, சிறைவாசம் முடித்து வெளிவரும் ஒருவனாக பயணிக்கும் காமிராவும் அதன் ஆர்ப்பாட்டமற்ற ஆனால் அழுத்தமான கோணமும் படம் பார்ப்போரின் கவனத்தை உடனே ஈர்க்கிறது.

உலகப் படைப்பாளிகளின் கலைத் தாக்கத்தை தீர்ப்பதில் காதலின் மென்மையும், துரோகத்தால் விளையும் பழி தீர்த்தலின் வன்மையும் கலைமாலையின் ஈரிறுதியாக இருந்து வருகிறது. இவ்விரு இறுதிகளையும் ஒரு புள்ளியில் குவிக்கும் முயற்சியின் விளைவே இந்த 'காவி'யம். நட்பு, காதல், விசுவாசம், துரோகம், வலி என மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் எளிமையான கதையும் சரி, கதை நடக்கும் களமான மதுரையும் சரி, நமக்கு பழக்கப்பட்டதுதான். ஆனால், கதை நடக்கும் காலமும், அங்கு உலவும் மனிதர்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் உயிரோட்டம் கொடுத்து உருவாகிய விதமும் மிகப் புதிது; மிக நேர்த்தியானாது; மிக நேர்மையானது.

கதை நிகழும் முப்பதாண்டுகளுக்கு முந்தய கால கட்டத்தை பதிவு செய்ய எடுத்து கொண்ட முயற்சியும் (making), படத்தின் வடிவமைப்பும் (production design) அதில் உள்ளடங்கியுள்ள மதிப்பும் (production value) இத்திரைப்படத்தின் மெய்சிலிர்க்க செய்யும் அம்சங்களில் ஒன்று.

கதை ஆரம்பித்தவுடன் எதிர் வரும் இருவரின் கழுத்துப்பட்டையின் அதிகப்படியான அகலம் தொடங்கி, இலங்கை வானொலியின் செய்தி வாசிப்பாளரின் குரல், நீல நிற ஆவின் பால்ச்சாவடி, solidaire தொலைக்காட்சிப்பெட்டியின் முழு நீள சுவர் விளம்பரம், கதாநாயகியின் "ரெட்ட அன்ன" கழுத்து சங்கிலி, ஒலிப்பெருக்கியில் ஒலிக்கும் எண்பதுகளில் வெளி வந்த திரைப்பட பாடல்கள், படக் கதாநாயகன், படத்தில் சாதரணமாக கடந்து செல்லும் சிறுவர்கள் மற்றும் ஒரு காட்சியில் "முரட்டுக் காளை" படம் காண கலை அரங்கத்தின் முன் கூடியிருக்கும் மக்கள் கூட்டம் என அணைவரின் ஆடை வடிவமைப்பு, வீடுகளின் வாசற்கதவிலுள்ள இரும்பு வேலைப்பாடு, சுவர்களிலுள்ள வண்ணப்பூச்சு மற்றும் வீட்டிலுள்ள அறைகலன்கள், சாலையில் செல்லும் பேருந்து, சிற்றுந்து மற்றும் இரு சக்கர வாகனங்கள், பெட்டிகடைகளில் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் வாகனங்களின் பதிவு எண் வரிசை என படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எண்பதுகளின் அச்சு அசலான மறுபதிப்புக்கள். இந்த உழைப்பை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை!

கதாநாயகன் ஜெய்யின் வெள்ளந்தி கலந்த முன் கோபமும், சசி குமாரின் இறுக்கம் கலந்த ஒட்டுதலின்மையும், நாயகி சுவாதியின் மென்மையான கவிதை தனமான துறுதுறுப்பும், கருப்புவின் எகத்தாளம் கலந்த ஆழமும், சமுத்திரகனியின் சூழ்ச்சி மிகுந்த நயவஞ்சகத்தனமும், அவரது அண்ணனாக வரும் முன்னாள் counselor ன் இயல்பான பாத்திரமும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கிறது. இவர்கள் மட்டுமின்றி படத்தில் வரும் ஒவ்வொருவரும் அவ்வளவு இயல்பாக வந்து செல்கிறார்கள்.

எந்த பாத்திர படைப்பு சிறந்தது என கூறுவது மிகக் கடினம். எனினும், நான் மிகவும் ரசித்து புளங்காகிதம் அடைந்தது கருப்புவின் காசி பாத்திரம் தான். இத்தனை நேரம் ஒரு பூட்டிய வீட்டின் முன் தான் நாம் ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டியுள்ளோம் என்பதை அறிகையில் அவர் காட்டும் அவருக்கே உரித்தான முகபாவனையும் சரி, "இவங்க மத்தியில வாழ்றதே பெரிய பொழப்பு தான்!" என ஜெயிடம் எகத்தாளமாக கூறும் போதும் சரி, படத்தின் கடைசி காட்சிகளில் நண்பன் சசிகுமாரை காட்டி கொடுத்த பின் அவருக்கு ஏற்படும் வருத்தம், ஏமாற்றம், பயம், குற்றம், வலி என பல உள்ளுணர்வுகளை, தான் கட்டும் வேகமான நடையிலேயே காட்டும் போதும் சரி, அவர் கஞ்ச கருப்பு இல்லை; கருப்பு குதிரை!

படம் முழுவதும் சுவாதியின் பின் சுற்றிக்கொண்டும், அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டும், பொறுப்பாக இருக்க சொல்லி அறிவுறுத்தும் அம்மாவிடம் எரிந்து விழுவதையே பதிலாக கொண்டும் திரியும் ஜெய், "நம்ம குல மானத்தையே காப்பாத்திட்டம்மா!" எனக் கூறிக்கொண்டே சுவாதியை சமுத்திரக்கனி இழுத்துக்கொண்டு செல்கையில், தன் நெஞ்சில் கத்தி இறங்குவதற்குமுன்பே தான் உணர்வு பூர்வமாக இறந்து விட்டதை காட்டும் வகையில் அவர் கண்களில் காட்டும் அந்த மிரட்சி, நமக்கு ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் ஏற்படுத்தும் சோக அதிர்ச்சி!

சமுத்திரக்கனி அவ்வளவு கன(கு)க்கச்சிதமாக நடித்துள்ளார். ஜெய், சசிகுமாரின் மனதை "தாய புள்ளையா பழகியிருக்கோம்" என நயவஞ்சகமாக கூறி கொலை செய்ய தூண்டி மனதை மாற்றும் போதும் சரி, சுவாதியின் மனதை மாற்றி ஜெய்யை கொல்ல சதி செய்யும் போதும் சரி, மனித உணர்வுகளின் மென்மையை சுரண்டி பின் அந்த உணர்வுகளை தன் சுய ஆதாயத்திற்காக பகடைக்கைகளாக பயன்படுத்தும் அவரது சூதாட்டக்காரத்தனம் மிகவும் ரசிக்கும்படியானது.

படம் முழுவதும் இறுக்கமாகவும், அமைதியாகவும் வரும் சசி குமார் சமுத்திரகனியை முண்டமாக துண்டாக்கிவிட்டு, கருப்புவின் முன் எரிமலையாக குமுறும் போது நடிப்பில் மிளிர்கிறார். சுவாதி, தன் மருளும் விழிகளாலும், சென்னை தண்ணீர் குழாய்களில் வருவது போன்று அவரது இதழோரத்தில் வழியும் மெல்லிய புன்னகையாலும் நம் நெஞ்சை கொள்ளை கொள்கிறார். வாசற் கதவை சாத்திகொண்டே காதலனுக்கு கையசைக்கும் போதும், கண் முன் காதலன் கொல்லப்படும் போது தலையை கையால் அடித்து கொண்டே கதறும் போதும் அருமையான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

படத்தின் வடிவமைப்பு, பாத்திர படைப்பு, பாத்திரங்களின் நடிப்பு என இந்தப்படத்தின் சிறப்பை பற்றிய வரிசையில் அடுத்த இடம் நிச்சயம் ஒளிப்பதிவாளர் கதிருக்கு தான். படம் நடக்கும் காலத்தையோ, களத்தையோ, கதையின் உயிரோட்டதையோ சற்றும் சிதைக்காமல் காமிராக் கோணங்களிலும், இயற்கையான ஒளி அமைப்பிலுமே படத்திற்கு மற்றொரு பரிமாணத்தை கூட்டுகிறது. படத்தில் கதாபாத்திரங்களின் மீது கதிரின் காமிரா கொண்டுள்ள அருகாமை, படத்திற்கும், நமக்குமான இடைவெளியை முற்றிலும் குறைத்து விடுகிறது. படத்தின் ஆரம்ப காட்சியில், ஜெய், சுவாதி மற்றும் சசியிநூடே புகுந்து விளையாடும் போது காமிரா படைத்திருப்பது முக்கோண கவிதை! அதே போல் படத்தின் இறுதிக்காட்சியில் கருப்பு சசியை காட்டி கொடுத்து விட்டு, வேகமாக நடையை கட்டி கொண்டே தன் நண்பன் சாகடிக்கப்படுவதை திரும்பி பார்க்கையில், நாம் கருப்புவின் கண்கள் வழியே வெகு தூரத்தில் காண்பது, நான்கைந்து நபர்களின் கைகால் அசைவையே. ஆனால் அந்த காட்சியின் தூர வீச்சு (long shot) அமைக்கப்பட்ட கோணத்தை மட்டும் கொண்டு காட்சியின் வீரியத்தை விளக்கும் கதிரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

அடுத்து படத்தின் பின்னணி இசை. படத்தின் பல காட்சிகளில் 'ராஜ' பாட்டையே நடத்தியுள்ளார். சாராயக்கடையில் வைத்து கஞ்சா கருப்பு, ஜெய்யிடமும் சசியிடமும் தங்கள் நண்பன் சித்தனுக்காக சமுத்திரகனியிடம் சென்று உதவி கேட்டு செல்ல சொல்லும் போது, ஜெய் சமுத்திரகனியை பார்க்க செல்கையில், சுவாதியை பார்க்க கிடைக்கும் சந்தர்ப்பத்தை எண்ணி உள்ளுக்குள் மகிழ்வதை காட்ட அந்த கல்லுக்குள் ஈர பாடலை பின்னணி யாக இசைப்பது 'ராஜா' த்தனம் எனினும் ரசனையனாது. ஜெய் கொல்லப்படுமுன், சுவாதியிடம் பேசிகொண்டிருக்கையில் பின்னணியில் வல்லுரூகளை அலரவிட்டுருப்பது அந்தக் காட்சியின் ஆழத்திற்கு உதவுகிறது. அதே போல், கடைசி காட்சியில், சசி கொல்லப்படும் போது, கருப்புவின் கால்களோடு, பின்னணி இசை போடும் குதியாட்டம் ஜேம்ஸ் வசந்தனின் திறமையை பறை சாற்றுகிறது. 'கண்கள் இரண்டால்' என்ற பாடலும் மிக இனிமை.

கஞ்ச கருப்புவிடம் சமுத்திரகனியின் அண்ணன் விடுத்துருக்ககூடிய மிரட்டலையோ, அதனால் கஞ்சா கருப்புவிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நிர்பந்ததையோ விளக்க தேவைப்படும் பல நூறடி காட்சிகளை, கஞ்ச கருப்புவின் பதற்றம் கலந்த வேகமான நடையிலும், அவர் இறுதுயில் வடிக்கும் ஒரு சொட்டு கண்ணீரிலும் காட்டிய சசி குமார் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்!

10 Comments:

 • But, don;t u think that the same stills remind us of the olden movies..such as that of Mahendrans's etc????

  By Blogger Raghu, At August 13, 2008 at 4:51 AM  

 • Mani,
  This is a well written review. I have heard part of the review in Jaya TV bu Suhasini in her'Hasini Pesum Padam' film review. But have not yet seen this film.
  But I 'm surprised somebody like PERARASU has made such an impacting realistic film is unbelievable. My anger about his 'SIVAKASI' is still quite raw.
  I will certainly endeavour to see the film on Disc and write my impression.
  Dr T Subramanian

  By Blogger drsubbu, At August 13, 2008 at 4:53 PM  

 • Mani,

  My take on the movie

  Pluses:
  Very good acting by Jay and G.Karuppu.
  Kudos for painstakingly recreating 80's.

  Minus:
  Little or no originality in story or screenplay.
  Samudhirakani's character potrayal is imcomplete.
  Too much violence.
  Swathy character takes no stand when Jay threatens to kill Samudhirakani. Quite unbelievable.

  By Blogger padmakumar, At August 13, 2008 at 9:26 PM  

 • Paddy,

  I agree with your points on lack of originality in story and swadi's character lacking depth. On violence part, it is certainly justified. It is an integral part of the movie flow. It is an outburst of emotion. Both the scene preceding samudrakani's murder by sasi and the scene following it well justifies the violence. Samudrakani's character depth - his cunningness and evilness - is what justifies the intensity of violence too. As far as screenplay is concerned, remember it is a recreation of happenings in one of the places of Madurai by 80s. There might be other movies in the past that have captured incidents similar to the ones in this movie. It does not mean that it lacks originality in Screenplay. In fact, there is no scope for originality in screenplay in this movie. Have you ever criticized Pulp Fiction lacking originality in screenplay - what i mean here is the array of individual scenes. Whatever the scope the movie had for original screenplay, it has it. I have only one question. Do you have a justification for your comment on Samudrakani's incomplete character portrayal.

  - Mani

  By Blogger Mani, At August 13, 2008 at 10:34 PM  

 • Paddy,

  i also want to emphasize these lines that are part of my review ..

  நட்பு, காதல், விசுவாசம், துரோகம், வலி என மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் எளிமையான கதையும் சரி, கதை நடக்கும் களமான மதுரையும் சரி, நமக்கு பழக்கப்பட்டதுதான். ஆனால், கதை நடக்கும் காலமும், அங்கு உலவும் மனிதர்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் உயிரோட்டம் கொடுத்து உருவாகிய விதமும் மிகப் புதிது; மிக நேர்த்தியானாது; மிக நேர்மையானது.

  the whole movie focuses on these..no need for original story or screenplay here.

  - Mani.

  By Blogger Mani, At August 13, 2008 at 11:08 PM  

 • Mani,

  I disagree.I think our expectation from a movie is different. There is no point in discussing it further.

  By Blogger padmakumar, At August 14, 2008 at 4:47 PM  

 • yov mani,

  Mr.Padmakumar doesnot seem to like a lot of movies that a common public!!!! The lack of originality doesn't make sense when the intention was to replicate a movie taken in the 80's..
  Anyways the movie was overall good except that it was slow at times and the fact they could murder a "mavatta chaiyalar" and hang in there free to do a couple of more murder doesn't make sense when ghanja karruppu get a whooping 27 years in jail for a couple of murders.
  The song "kaangal irandal" is awesome..i have been hearing it over and over.

  For future reference IMHO, reduce the complexity of expaining scene would help understand "paamarans" like me.

  By Blogger Thiru, At August 14, 2008 at 5:22 PM  

 • A different movie.. Loved the potrayal of the life sytle.

  If you see the interview of the team on Coffee with Anu, you can see the guys had enjoyed making this movie.
  Samudrakani potrays his character completely.

  I think this movie is for the folks who wish to see something different, than rhetoric crap which top actors put out.

  Since our man Ganja Karupu(excellent acting skills) dies at the end that satisfied the Poetic justice aspect in the movie.

  Hats of to Sasi's young team. Sasi himself has done a great job.

  Prem.

  By Anonymous Anonymous, At August 15, 2008 at 6:37 AM  

 • Yes....The song ,kangal irundal is fantastic!!!!

  By Anonymous Jhanvi, At August 15, 2008 at 1:50 PM  

 • Good job,Mani!!!

  By Anonymous Ramki, At August 15, 2008 at 9:46 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]Links to this post:

Create a Link

<< Home