my thoughts.....

constellation, assimilation, formation and expression of my cerebration!

Wednesday, August 26, 2009

கந்தசாமி - ஒரு அக்னி பார்வை!

Thai மொழியில் இருந்து விஷ்ணுவர்த்தன் சுட்டுட்டாரு; Memento வை முருகதாஸ் சுட்டுட்டாரு; Bicycle Thieves ஐ வெற்றிமாரன் சுட்டுட்டாரு ன்னு சொன்னா netflix ல நாலு English படம் பாத்துட்டு மேதாவித்தனமா பேசுறேன்னு சொல்லலாம். அத்த கூட ஒழுங்கா சுடதெரியல அப்பிடின்னு சொன்ன ரொம்ப ஓவரா பேசுறேன்னு சொல்லலாம். அட நம்ம உள்ளூரில நம்ம ஷங்கர் எடுத்த படங்கள சுட்டது மட்டுமில்லாம அதையும் ஒழுங்கா சுடமா நம்ம சீயான வச்சு எடுத்து இருக்கிற இந்த கொடுமையை எந்த சரவணன்ட போய் சொல்றது.

ஒரு ஹீரோவோட அறிமுகம் இவ்ளோ சின்ன புள்ள தனமா இருந்து சமீபத்தில் பாத்ததா சுத்தமா ஞாபகம் இல்ல. கொக்..கொக்.. கொக்கரக்கோ...ன்னு கேவலமா கூவுனதுக்கு பதிலா நீ எந்த ஊரு நான் எந்த ஊருனாவது கூவீருக்கலாம். கொஞ்சம் கெட்டப்பாவாவது இருந்து இருக்கும். திரைக்கதை ஒரு தெளிந்த நீரோடை மாதிரி இருக்கனுன்றது ஒரு அடிப்படை நியதி. இந்த படத்தில் ஒரு தெளிவும் கிடையாது அந்த ஓடையில சுத்தமா தண்ணியும் கிடையாது. காட்சி அமைப்பு தர்க்க ரீதியாக (logic) இருக்க வேண்டுமென்பதை அரைகுறையாக புரிந்து கொண்டுள்ளதன் வெளிப்பாடே சீயான் சேவலா பறக்கும்போது, பிண்ணனியில் பாடுபடும் அந்த பத்து பைத்தியக்கார பயல்களின் வெட்டி வேலை!

காட்சி அமைப்புக்கள் தர்க்க ரீதியாக இருக்க வேண்டும் என்பது உண்மை தான். அதே சமயம் சில காட்சி அமைப்புக்கள் தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்டது. கலை நுணுக்கத்திர்க்கோ அல்லது நுண்ணிய உணர்விற்கோ எந்த தர்க்க ரீதியும் கிடையாது. அது வெறும் மௌனமாகவோ அல்லது மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாகவோ இருக்கலாம். உயிருக்கு உயிரான காதலியை கொன்றவுடன் காதலனின் கோபாவேசத்திற்கு இரையாகும் உயிர்களின் எண்ணிக்கைக்கு எவ்வித தர்க்க ரீதியும் கிடையாது. இன்னும் சில பிம்பங்களுக்கு உருவமே கிடையாது. உதாரணமாக, ரஜினிகாந்த் எப்படி பறந்து பறந்து சண்டை போடும் ஆற்றலை பெற்றார் என்பதற்கு எவ்வித உருவமோ அல்லது விளக்கமோ கிடையாது, தேவையும் இல்லை.

கந்தசாமி பாத்திரமும் தர்க்க ரீதியாக எளிதில் விளக்க முடியாத ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கக்கூடிய ஒரு பாத்திரம். அதை தர்க்க ரீதியாக விளக்க முற்பட்டு படம் நெடுக அமைந்திருக்கும் காட்சிகள் வெறும் கேலிக்குரியது. அடர்ந்த செடிகளுக்கு பின்னமைந்திருக்கும் அந்த பாழடைந்த இடத்திற்கு படகில் செல்லும் விக்ரம், அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு பின்னால் அமைந்திருக்கும் பாழடைந்த வீட்டிற்கு பைக்கில் செல்லும் gentleman அர்ஜுனையும், IT ரைடால் பக்க வாதம் தாக்கும் (அல்லது வந்ததாக நடிக்கும்) ஆசிஷ் வித்யார்த்தி, IT ரைடால் பக்க வாதம் தாக்கும் செல்லமே கிரிஷ் கர்நாடையும், கந்தசாமி பற்றி பேசும் ஊர் மக்களின் உரைநடை, இந்தியன் தாத்தாவை பத்தி பேசிய மக்களையும், இறுதிக் காட்சியில் சியான் பார்க்கும் பார்வை, அந்நியனில் விக்ரம் காட்டிய அதே பார்வையும் நம்ம கண்ண முன்னே கொண்டு வந்த சுசி கணேசனனுக்கு, விவேக் பாணியில் பதில் சொல்லனும்னா, நாங்க இதெல்லாம் ஏற்கனவே பாத்துட்டோம் சுசி கணேசா!

படத்தின் ஒரே ஆறுதல் கவர்ச்சி புயல் ஸ்ரேயா தான். படம் நெடுக வளைவு, நெளிவு, சுளிவுடனும், பாதி ஆடையுடனும், அதிரடியான குரலுடனும் வளையவரும் சுப்புலட்சுமியே படத்தின் ஒரே வெற்றி லட்சுமி. Alegra பாடலிற்கு அவர் ஆடும் அந்த பெல்லி நடனம் படத்தின் வெகு சில ரசனைகளில் ஒன்று. ஆனால் இந்த சுப்புலட்சுமியின் ஆட்டத்திற்கே மயங்காமால், ஒவ்வொரு பாடலின் போதும் அரங்கமே வெளியே தம்மடிக்க சென்றதும் நிகழத்தான் செய்தது. ரசனையற்ற முறையில் பாடல்களை படமாக்கிய விதத்திற்கும் திரைகதையில் அவை இடைச்செருகலாக அமைந்ததற்கும் ஸ்ரேயாவின் கவர்ச்சி புயலென்ன வேறு எந்த புயலும் ஈடு கொடுத்திருக்க முடியாது.

பணம் நிறைய இருக்கிறவண்ட இருந்து புடுங்கி அது இல்லாதவண்ட கொடுக்குற கந்தசாமி மாதிரி, நிறைய கதை இருக்கிறவண்ட இருந்து புடுங்கி அது இல்லாத சுசி கணேசன் மாதிரி ஆளுக்கிட்ட கொடுக்க வேற எந்த சாமியாவுது வந்தா பரவாயில்ல!

5 Comments:

 • Hey,
  Great! Well written- Good anecdotes(though it is claimed that it comes out of observation only ;-) )!
  Nicely reflected - Good slang variation ;-)!
  Well, if you could take a look at the last comment in the link :
  http://www.raghuism.com/2009/08/kandasamy-review-reminiscent-yet-decent.html
  Here,i have posed a sort of a general question(last comment)! You may give your reply to that question, may be!
  Cheers
  Raghu

  By Blogger Raghu Sharma, At August 28, 2009 at 2:37 AM  

 • மணி,
  நல்ல முயற்சி. இருந்தாலும் கொஞ்சம் "தர்க்கரீதியை" கம்மியா பயன்படுத்தி இருக்கலாம்.

  Good one all the same.

  By Blogger Karthikeyan, At August 29, 2009 at 6:34 PM  

 • Karthi,

  I was little affected by Susi's direction on characterizing the rooster. Athan, Konjam athigama use pannitaen. Anyways, thanks for your comment.

  - Mani

  By Blogger Mani, At August 30, 2009 at 12:47 PM  

 • Mani, Very enjoyable post.liked it.

  It seems it is not even worth watching it online. it would be waste of time as i have watched all these shankar movies already.

  By Blogger Siva, At September 5, 2009 at 1:07 PM  

 • enga poippa inda padathaiyellam parkura?

  By Blogger SUJAI, At May 9, 2010 at 8:15 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]Links to this post:

Create a Link

<< Home